TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு இந்தியன் வங்கியல் சிறப்பு அதிகாரி பணி

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சிறப்பு அதிகாரி
காலியிடங்கள்: 215
துறைவாரியான காலியிடங்கள் விவரம் வருமாறு: சட்ட அதிகாரி -25, கணினி அதிகாரி(ஐ.டி) -10, உதவி மேலாளர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி அதிகாரி -151, மொழி அதிகாரி, உதவி மேலாளர்(ஒ.எல்) - 29
வயதுவரம்பு: சட்ட அதிகாரி மற்றும் கணினி தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். வயதுவரம்பு 01.12.2011 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். மேலும் அரசு விதிகளின்படி வயதுவரம்பு தளர்வும் கடைப்பிடிக்கப்படும்.
கல்வித்தகுதி: பி.எல் மற்றும் எல்.எல்.பி., கணிப்பொறியியல் இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும் அத்துடன் ஆங்கிலம் ஒரு பாடமாகவும் கற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.20 .
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தினை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது இதை எடுத்துச் சென்றால் போதுமானது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 05.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment