TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை

தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் ‘இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்)’ செயல்பட்டு வருகிறது. 

இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. 

தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1315 சிறப்பு அதிகாரி "CRP SPL-VII" பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்க்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.  

மொத்த காலியிடங்கள்: 1315

பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)

பணி மற்றும் காலியிடங்கள்: 
1. IT Officers (Scale-I) -120
2. Agricultural Field Officer (Scale-I) - 875
3. Rajbasha Adhikari (Scale-I)    - 30
4. Law Officer (Scale-I) - 60
5. HR/ Personnel Officer - 35
6. Marketing Officer (Scale-I) -195

சிறப்பு அதிகாரி நிரப்பப்பட உள்ள வங்கிகள் விவரம்: அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, விஜயா வங்கி

தகுதி: பொறியியல் துறையில் CS, IT, EE மற்றும் ECE, Agricultural,  Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம் பெற்று பதிவு செய்திருப்பவர்கள், எச்ஆர், சந்தையியல் துறையில் எம்பிஏ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.11.2017 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: 07.11.2017 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.12.2017 மற்றும் 31.12.2017

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.1.2018 

மேலும் முழுமையான விவரங்களை http://www.ibps.in/wp-content/uploads/IBPS_CRP_SPL_VII_Detail_Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment