TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பேரிடர் மேலாண்மை திட்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட, பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் உள்ள தாற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தில் காலியாக உள்ள தாற்காலிக பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
 மீஞ்சூர் வட்டத்தில் (திருவொற்றியூர் பகுதி) - ஒரு கிராம தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்
பணியிடம் நிரப்பபட உள்ளது. இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பேரிடர் அபாய மேலாண்மையில் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
 கடலோரப் பகுதிகளில் பேரிடர் அபாய மேலாண்மை சார்ந்த களப்பணியில் குறைந்தது 3
வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் இருப்பிடம் சம்பந்தப்பட்ட வட்டத்துக்குள் அல்லது அருகாமையில் இருக்க வேண்டும்.
 மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய திறன், சமுதாய வளர்ச்சிப் பணி மேற்கொள்ளும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும். இதற்கு ஒப்பந்த தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.
 இதுகுறித்த கூடுதல் விவரங்கள், விண்ணப்பம் http:www.tiruvallur.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும் விண்ணப்பத்தை இலவசமாக பெறலாம்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்று, ஆவணங்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment