ஹாசனில் ஏப்.27-ஆம் தேதி விமானப்படை வீரர் ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய விமானப்படை சார்பில் ஹாசனில் சாலகாமே சாலையில் உள்ள ஹாசனாம்பா உள்விளையாட்டுத் திடலில் ஏப்.27 முதல் 30-ஆம் தேதிவரை விமானப்படை வீரர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்திய விமானப்படை சார்பில் ஹாசனில் சாலகாமே சாலையில் உள்ள ஹாசனாம்பா உள்விளையாட்டுத் திடலில் ஏப்.27 முதல் 30-ஆம் தேதிவரை விமானப்படை வீரர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
விமானப்படை வீரர் குரூப்-ஒய் தொழில்நுட்பம் (ஆட்டோமொபைல் டெக்னிஷியன், கிரண்ட் டிரையினிங் இன்ஸ்ட்ரக்டர், ஐஏஎஃப்-போலீஸ்) பணிகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
ஆள்சேர்ப்பு முகாமில் 1997 ஜூலை 7 முதல் 2000 டிச.20-ஆம் தேதிக்குள் பிறந்த கர்நாடகத்தைச் சேர்ந்த திருமணமாகாத இந்திய குடிமக்கள் தகுதியானவர்கள் ஆவர். 10 2 படித்திருக்க வேண்டும். இத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் அவசியம். ஆங்கிலத்தில் 50 சதவீதம் கட்டாயமாகும்.
தகுதியான மாணவர்கள் முகாம் நடத்தப்படும் இடத்துக்கு காலை 9 மணிக்குள் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் 4 சான்றொப்பமிடப்பட்ட அவற்றின் நகல்கள், 7 வண்ண பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் வருகைதர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கட்டளை அதிகாரி, 7, விமானப்படை ஆள்தேர்வு மையம், கப்பன் சாலை, பெங்களூரு என்ற முகவரி அல்லது 080-25592199 என்ற தொலைபேசி அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது co.7asc-kar@gov.in என்ற மின்னஞ்சல் அல்லது www.airmenselection.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment