TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

TNPSC: உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழ்நாடு உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை சேவை துறையில் காலியாக உள்ள 326 7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் வேளாண் துறையில் டிப்ளமமோ முடித்திருக்க வேண்டும். 1.7.2017 அன்றைய நிலையில், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் 18 வயது நிறைந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஏப்ரல் 7 -ஆம் தேதிக்குள்ளும், கட்டணத்தை 11-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது. அவை தாள் - I  ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தாள் - II அன்று மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வானது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி நகரங்களில் நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_8_not_eng_asst_agrl_officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment