அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 3 இடங்களும், கோவை, திருச்சி ஆகிய மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பணியிடம் என உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2017 அன்றைய நிலையில், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தவருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 32 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன்கூடிய, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடனான விண்ணப்பத்தை, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் "அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment