சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் மலர்விழி கூறியதாவது: மாவட்ட வேளாண்மைத்துறையில் 4 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2016 ஜன.,1ல் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.அதிகபட்சம் பொதுபிரிவினர் 30 வயதிற்குள், பிற்பட்டோர், மிகவும் பிட்டோர் 32 வயதிற்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டு சலுகை; முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; குறைந்தபட்ச கல்வித் தகுதியை விட கூடுதலாக படித்தோருக்கு வயது வரம்பு இல்லை.முன்னுரிமையுள்ள பொதுப்பிரிவினர் (பொது), ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்பட்டோர் (பொது), பிற்பட்டோர் (பொது) ஆகிய 4 பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் 4,800 ரூபாய், தர ஊதியம் 1,300 ரூபாய். விண்ணப்பத்தில் பெயர், கல்வித்தகுதி, ஜாதி, வீட்டு முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு சமீபத்திய புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை வேளாண்மை இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியுள்ளோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர், என்றார்.
Home
Unlabelled
சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு.
சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு.
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment