சென்னை மாவட்ட புள்ளியியல் அலுவலகங்களில் புள்ளி விவரத் தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகங்களில் தாற்காலிகமாக 9 புள்ளி விவரத் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கணினியில் டிப்ளமோ சான்றிதழ் தேர்ச்சி (எம்.எஸ்.ஆபிஸ்), வயது வரம்பு 1.7.2015 அன்றைய நிலவரப்படி எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.15,000 ஆகும்.
தகுதியான நபர்கள் மார்ச் 10 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ’’புள்ளியியல் துணை இயக்குநர், சென்னை மாவட்ட புள்ளியியல் அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், எண் 359, இணைப்புக் கட்டட தரைதளம், தேனாம்பேட்டை, சென்னை -6 என்ற முகவரிக்கு, ஏ4 அளவிலான தாளில் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி சுயவிவர குறிப்புடன் தங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment