TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அணு ஆற்றல் துறையில் அறிவியல் அதிகாரி பணி

மத்திய அரசின் அணு ஆற்றல்துறையில் (Department of Atomic Energy- DAE) நிரப்பப்படவுள்ள அறிவியல் அதிகாரி (Scientific Officers) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், நியூக்ளியர் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் பி.எஸ்சி(பொறியியல்) மற்றும் எம்.டெக்(5 ஆண்டு) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி, 26க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இறுதித்தேர்வு எழுதி உள்ளவர்களும், GATE-2016 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: OCES - 2017  (Scheme-I) (One Year Training Program for Engineering Graduats) or Science Post Graduates)
உதவித்தொகை: இப்பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.35000 நூல் வாங்க ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும்.

பணி: DGFS (Scheme-II)
உதவித்தொகை: இப்பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.35000 நூல் வாங்க ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும். இதர செலவுகளுக்காக ரூ.25000 வழங்கப்படும். படிப்பிற்குப்பின், சயின்டிஃபிக் அதிகாரி பணி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். முதலில் கேட்-2016 அல்லது கேட்-2017 தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும். பின் இரண்டாவது நிலையில் நேர்முகத் தேர்வைச் சந்திக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மண்ணியல் மற்றும் புவி இயற்பியல் முடித்தவர்கள் மட்டும் மருத்துவத் தகுதித் தேர்வைச் சந்திக்க வேண்டும். கேட் தேர்வு எழுதாதவர்கள், அணுசக்தித் துறை வருகிற மார்ச் மாதத்தில் நடத்த உள்ள ஆன்லைன் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வில் கொள்குறி வகையில் 100 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்விற்குப்பின் அனைத்துச் சலுகைகளுடன் குரூப்-A அறிவியல் அதிகாரி பணி பெறுவார்கள். மேலும் ஹோமி பாபா அணு ஆய்வு மையத்தில், எம்.டெக்., எம்.பில் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.barconlineexam.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ஆண் பொதுப் பிரிவினரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. போரில் இறந்த ராணுவத்தினரின் பிள்ளைகள், பெண்கள் ஆகியவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில்லை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barconlineexam.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment