TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, +2 முடித்தவர்களுக்கு பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-18-ஆம் ஆண்டிற்கான 137 தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு ஐடிஐ மற்றும் 2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 137
பணி இடம்: நெய்வேலி (தமிழ்நாடு)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 22
2. Turner - 08
3. Mechanic (Motor Vehicle) - 37
4. Wireman - 23
பயிற்சிகாலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: மாதம் ரூ.8,132
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
5. Mechanic (Tractor) - 14
6. Plumber - 03
7. Carpenter - 02
பயிற்சிகாலம்: 2 ஆண்டுகள்
உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.7,299. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.8,132
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
8. PASAA - 11
பயிற்சி காலம்: 1 ஆண்டு
தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
9. Medical Lab Technician - 17
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
உதவித்தொகை: மாதம் ரூ.6,325
தகுதி: உயிரியல்(தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய பாடங்களுடன் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: 01.03.2017 காலை 10 மணி முதல் 10.03.2017 அன்று மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தின்
எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt_tat_april17_24022017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment