தமிழ்நாடு எம்.ஆர்.பி. அமைப்பு தெராபிடிக் அசிஸ்டன்ட் பணிக்கு ஆண் மற்றும் பெண் மருத்துவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்களுக்கு 57 பணியிடங்களும், பெண்களுக்கு 49 பணியிடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.
பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-2016-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் 57 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு நேர்காணல் கிடையாது. டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 50 சதவீதமும், மேல்நிலைக் கல்விக்கு 30 சதவீதமும், எஸ்.எஸ்.சி. படிப்பிற்கு 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற முடியும்.விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ.எஸ்.டி. பிரிவினர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், துறை ஊழியர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-1-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Home
Unlabelled
www.mrb.tn.gov.in | 106 துணை மருத்துவ பணிகள்
www.mrb.tn.gov.in | 106 துணை மருத்துவ பணிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment