TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

www.airindia.com | விமான நிறுவன பணிகளுக்கு நேர்காணல்

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்பு ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL). தற்போது இந்த நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணிக்கு நேரடி நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தெற்கு மண்டல பகுதிகளான சென்னை, ஐதராபாத், கேரளா விமான நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. சென்னையில் 25 இடங்களும், ஐதராபாத்தில் 45 இடங்களும், கேரளாவில் 37 இடங் களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-12-1988 மற்றும் 1-12-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படு கிறது. AVSEC சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கும் 3 ஆண்டு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: AVSEC அல்லது Screener சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ்கள் இல்லாமல் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே. கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.500 கட்டணம் டி.டி ஆக இணைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்து வந்து நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம். அசல் சான்றிதழ்கள் மற்றும் தேவையான நகல் சான்றுகள், புகைப்படங்கள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான நேர்காணல் 5-1-2017 மற்றும் 6-1-2017 ஆகிய தேதிகளில் நடைபெறும். நேர்காணல் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏர் இந்தியா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment