பெல் நிறுவனத்தில் 738 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
பாரத மிகு மின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் ஐ.டி.ஐ. டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 738 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக எலக்ட்ரீசியன் - 155, பிட்டர் - 217, வெல்டர் - 108, மெஷினிஸ்ட் கம்போசிட் - 102 இடங்கள் உள்ளன. இவை தவிர டர்னர், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், மோட்டார் வெகிகிள் மெக்கானிக், மாசன், பெயிண்டர் உள்ளிட்ட பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31-3-2017-ந்தேதியில் 14 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: போட்டித் தேர்வு மற்றும் நேர் காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 31-1-2017-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
முன்னதாக புகைப்படம் கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து வைத்திருந்து தேவையான இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 7-2-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bhelbpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Home
Unlabelled
பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment