TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

டிப்ளமோ முடித்தவர்களுக்கு அணுசக்தி நிறுவனத்தில் பணி

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் (BARC) நிரப்பப்பட உள்ள 168 ஸ்டைபென்டரி டிரெயினி, டெக்னீசியன், அப்பர் டிவிஷன் கிளார்க் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 13.12.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டன்ட் சான்றிதழ் பெற்றவர்கள், அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மற்றும் அறிவியல், கலைத்துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்ய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2016
எழுத்து தேர்வுக்கு வரும்போது ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட்டை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



No comments:

Post a Comment