TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் பணி

epf

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் தலைமை அலுவலகமான புதுதில்லி மற்றும் கிளை அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள 233 இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Director (Vigilance) - 01
சம்பளம்: ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.
தகுதி: அகில இந்திய அளவில் மத்திய அரசு அலுவலகங்களில் குருப் ஏ சர்வீசில் 9 ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கையாளும் விதிமுறைகள் குறித்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Director (Vigilance) - 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.
தகுதி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் அல்லது மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்/ யூனியன் பிரதேச அரசு அலுவலகங்களில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Director (Vigilance) - 37
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசுகளில் தொிழலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

பணி: Vigilance Assistant - 40  
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: தொழிலாளர்கள் வருங்காலை வைப்பு நிதி கழகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: Deputy Director (Audit) - 09
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். பி.காம்., படித்திருக்க வேண்டும் மற்றும் அலுவலக தேர்வுகளான எஸ்ஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6,600.
 
பணி: Assistant Director (Audit) - 13

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Assistant Audit Officer - 31
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணி புரிந்திருக்க வேண்டும்.

பணி: Auditor - 55
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆடிட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Programmer - 38
தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் முதுகலை பட்டம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் எம்.டெக்., அல்லது  பி.இ. அல்லது பி.டெக்., மற்றும் எலக்ட்ரானிக் டேட்டா புராசசிங் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது கம்ப்யூட்டர் அப்பளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது முதுகலை பட்டம் அல்லது பி.இ., மற்றும் எலக்ட்ரானிக் டேட்டா புராசசிங்கில் 4 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.epfindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அந்த வடிவமைப்பை கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Shri Sanjay Bisht,
Regional Provident Fund Commissioner (HRM),
Bhavishya Nidhi Bhawan,
14,Bhikaji Cama Place,
NEWDELHI- 110 066.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.12.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.epfindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளம்

No comments:

Post a Comment