TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இன்ஜினியர் ஆகலாம்

மகா ரத்னா நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் 50 ஆண்டுகளாக இந்தியாவின் எரிபொருள் தேவையை நிறைவேற்றி வருகிறது. ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 601 கோடி வரை எரிபொருள் விற்பனையில் சாதனை படைத்து வரும் இந்தியன் ஆயில் நிறுவனம், ஆசியாவில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களையும், பைப் லைன்களையும், மார்க்கெட்டிங் களத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இவை தவிர இன்டேன் எல்பிஜி கேஸ் மற்றும் செர்வோ எண்ணெய் சப்ளை நிறுவனங்களையும் நிறுவி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது.  இந்தியாவின் எரிசக்தியான இந்தியன் ஆயில் நிறுவனம் உலக அளவில் பாராட்டும் நிறுவனமாக திகழ்கிறது.

இந்நிறுவனத்தில் Civil, Chemical, Electrical, Metallurgy, Mechanical, Instrumentation, Computer Science and Information Technology, Electronics and Communications, Polymer Science and Engineering ஆகிய துறைகளில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். 

கேட்-2017க்கான பதிவு எண்ணை பெற்ற பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

கேட்-2017 தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் http://www.iitr.ac.in/gate/ அல்லது மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், சென்னை ஆகிய ஐஐடிக்களில் இணையதளத்தையோ அல்லது பெங்களூர், இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் இணையதளத்தையோ பார்க்கவும்.

கேட்-2017க்கும், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.2.2017

No comments:

Post a Comment