மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், ஓசி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். நிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம்.
No comments:
Post a Comment