TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழகத்தில் 2,922 செவிலியர் பணியிடங்கள் மற்றும் 1,223 பொது மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,223பொது மருத்துவர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் பணியிடங்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் வைரமுத்து ராஜூ நேரில் ஆஜரானார். தமிழக சுகாதாரத்துறை சார்பி்ல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் 2,922 செவிலியர் பணியிடங்கள் மற்றும் 1,223 பொது மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை நவம்பர் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment