TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தொழிற்பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு.

உடுமலை, அரசு தொழிற்பயிற்சி மையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

உடுமலை, அரசு தொழிற்பயிற்சி மையத்தில், பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.பணிமனை உதவியாளர் மின்சாரப்பணியாளர் பிரிவில் என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., முடித்தவர்கள் பொதுப்பிரிவு முன்னுரிமைதாரர்கள், (ஆதரவற்ற விதவை, தாழ்த்தப்பட்ட இன கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மகன் அல்லது மகள், பர்மா அகதிகள், பெற்றோரை இழந்த ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசுக்கு நிலம் வழங்கியவர்கள், இவற்றுள் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பணிமனை உதவியாளர் பொருத்துநர் பிரிவில் என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., முடித்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மகளிர், பெண்கள் முன்னுரிமைக்கான ஏதேனும் ஒன்று அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்புஊதிய ஏற்ற முறை, 5,200ரூபாய்- 20,200 ரூபாய் வரை. நடப்பாண்டு, ஜூலை மாதம் முதல் அரசு நிர்ணையித்தபடி,ஒ.சி.,பிரிவில் 30, பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவில் 32, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 35 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறைபெயர், பொது கல்வித்தகுதி, தொழில்நுட்பகல்வி, இனம்/ மதம், முன் அனுபவவிவரம், முகவரி மற்றும் மொபைல் போன் எண் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக எழுதி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சி.என்.ஆர்., மார்க்கெட், காந்தி நகர் அஞ்சல், உடுமலை, திருப்பூர் மாவட்டம்- 642154 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள், நவ., 4ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பங்கள், தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment