காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையத்தோடு இணைந்த 15 குழந்தைகள் காப்பகப் பணியாளர்கள், 15 குழந்தைகள் காப்பக சமையலர், உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய 04.11.2016 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு 08.11.2016 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை சமையலர், உதவியாளர் பதவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வளாகம் காஞ்சிபுரத்தில் வைத்து நடத்தப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்
காலிபணியிடம் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்கலில் வசிப்பவராகவும், நகராட்சி பகுதிகளில் காலிபணியிடம் உள்ள பகுதி(வார்டு) அல்லது அருகில் உள்ள பகுதி (வார்டு) வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
திருமணமான மகளிராக இருக்க வேண்டும். விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊணமுற்றவர்களுக்கு உரிய வகையில் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 25 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் குழந்தைகள் காப்பக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும். எழுத படிக்க தெரிந்த 20 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் ஊதிவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பற்கான கடைசி தேதி: 04.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kanchi.tn.nic.in/Pressrelease/pr_2016_370.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க..
http://www.icds.tn.nic.in/files/AWW-Main.pdf
http://www.icds.tn.nic.in/files/AWH.pdf
No comments:
Post a Comment