TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசு நிறுவனங்கள், ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய ராணுவம், கடற்படை, தொழில் பாதுகாப்பு படை மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவம் இளநிலை அதிகாரி (ஜேசிஓ) பதவி நிலையில் மதபோதகர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பங்களை வரவேற் றுள்ளது. பண்டிட் பிரிவில் 59 காலி இடங்கள் உள்ளன. இந்துமதத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் அல்லது இந்தி பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆன்லைன் (www.joinindianarmy.nic.in) மூலம் நவம்பர் 8-ம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 27 முதல் 37 வரை. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ராணுவ வீரர்களுக்கு சமய நூல்களில் இருந்து போதனைகளை அளிக்க வேண்டும் ரெஜிமென்ட், யூனிட் நிலைகளில் உள்ள சமய அமைப்புகளில் பல்வேறு மதச் சடங்குகளை நடத்த வேண்டும்.கடற்படையில் கல்வி, போக்குவரத்து பிரிவு களில் அதிகாரிகள் பதவிக்கு திருமணமாகாத குடிமக்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இயற்பியல், கணிதம், வேதியியல், ஆங்கிலம், வரலாறு ஆகியவற்றில் முதுகலைப் படிப்பு முடித்தவர் கள், எந்திரவியல், மின்னியல், மின்னணுவிய லில் இளநிலை அல்லது முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிடெக், எம்பிஏ, எம்சிஏ எம்எஸ்சி (ஐடி) பட்டதாரிகள் அத்தியாவசியப் பொருள் போக்கு வரத்து பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் (www.joinindiannavy.gov.in) அறிந்து கொள்ளலாம்.இந்தியன் ஆயில் நிறுவனம் தனது மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பொறியியல் உதவியாளர்கள் பதவியில் 100 பணியிடங் களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. உற்பத்தி, வேதியியல், மின்சாரவியல், எந்திர வியல், கருவிகள் இயல் ஆகிய பொறியியல் பட்டய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.iocl.com) விண்ணப்பிக்க வேண்டும்.இந்திய அணுசக்தி கழகத் தில் தொழில்நுட்ப அலுவலர், அறிவியல் அலுவலர், துணை மேலாளர் (நிதி), இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிகளில் 45 காலி பணியிடங்களை நிரப்ப, மாற்றுத்திறனாளி களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

இதற்கு அக்டோபர் 21-ம் தேதிக்குள்ஆன்லைனில் (www.npcilcareers.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எஃப்) காவலர் பதவிக்கு எஸ்சி, எஸ்டி வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ‘டிஐஜி சிஐஎஸ்எஃப் (தென்மண்டலம்), ராஜாஜி பவன், டி-பிளாக், பெசன்ட் நகர், சென்னை- 90 என்ற முகவரிக்கு நவம்பர் 19-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment