TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சார்ஜாவில் பணிபுரிய தச்சர்கள் தேவை

சார்ஜாவில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்று, மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள, மர தச்சர், மர பெயின்டர், சுவர் பெயின்டர், டைல்ஸ் கொத்தனார், எலக்ட்ரீஷியன்கள், டிப்ளமோ தேர்ச்சி பெற்ற, சிவில் மேற்பார்வையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

அலங்காரப் பொருட்கள் விற்பனையகத்திற்கு, பொருத்துதல் தொடர்பான பணிகளை அறிந்த, ஸ்டீல் பேப்ரிகேட்டர்கள் தேவைப்படுகின்றனர்; 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபர விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை,omcresum@gmail.comஎன்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 22505886, 22502267, 22500417 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment