சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Bio Statistics, Library Information Science, System Administration, Chemistry, Botany ஆகிய பிரிவுகளில் தலா ஒரு Senior Research Fellow காலிப் பணியிடம் உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வர்ம சிகிச்சை முறை ஆலோசகர் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு சித்த மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நிர்வாகப் பிரிவில் ஆலோசகர் பணிக்கு உள்ள ஒரு காலிப் பணியிடத்திற்கு Under Secretary அளவிலான பணியில் இருந்து ஓய்வு பெற்ற 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிர்வாகக் கணக்கு பிரிவில் உள்ள ஒரு பணியிடத்திற்கு CA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் அலுவலக மூத்த உதவியாளர்மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.crisiddha.tn.nic.inஎன்ற இணைய தள முகவரியைப் பார்க்கவும்.அல்லது ccrsadmn2011@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும். மேலும், 044 - 2621 2421 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்களை, Central Council For Research in Siddha, Anna Hospital Campus, Arumbakkam, Chennai - 600 106 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Home
Unlabelled
சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலில் பல்வேறு பணிகள்.
சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலில் பல்வேறு பணிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment