மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், பல்வேறு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.புனேவில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் Junior Engineer பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. பெங்களூருவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான VocationalRehabilitation மையத்தில், Vocational Instructor காலிப் பணியிடம் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.புனேவுக்கு அருகில் உள்ள Khadakwasla மின் உற்பத்திநிலையத்தில் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 9 காலிப் பணியிடங்களும், அறிவியல் பிரிவில் 8 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களும் உள்ளன.டெல்லியில் உள்ள Indian Council for Agriculture Research நிறுவனத்தில் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு 2 இடங்களும், கொச்சியில் உள்ள Central Institute of Fisheries Nautical and Engineering Training நிறுவனத்தில் இரண்டு Wireless Supervisor இடங்களும் உள்ளன.கொச்சியில் உள்ள National Institute of Fisheries Post Harvest Technology and Training நிறுவனத்தில் Processing cum Quality Assurance Supervisor பணிக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது.இதே போல் மும்பையில் உள்ள All India Institute of Physical medicine and Rehabilitation நிறுவனத்தில் Physiotherapist பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.அடிப்படைத் தகுதிகள்:மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.புனே துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள Junior Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Mechanical அல்லது Prodcution உள்ளிட்டவற்றில், ஏதேனும் ஒரு பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு முன் அனுபவம் அவசியம்.பெங்களூருவில் Vocational lnstructor பணிக்கு, மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மரத்தாலான பொருட்களைச் செய்வது குறித்த தொழில்நுட்பப்படிப்பை முடித்திருக்க வேண்டியதும் அவசியம்.ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, குறைந்தது தொடர்புடைய துறையில் இளநிலைப்பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கு, இந்திப் பட்டப் படிப்பு முடித்து, அறிவியல் மொழிபெயர்ப்பில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கொச்சியில் உள்ள Wireless Supervisor பணிக்கு, எலக்ட்ரானிக்ஸ் அல்லது தொலைத் தொடர்பில் பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.Processing cum Quality Assurance பணிக்கு, Fishery Science, Bio chemistry, Micro biology, Food Technology ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பட்டத்துடன் 2ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மும்பையில் உள்ள Physiotherapist பணிக்கு, Physiotherapy பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டியது அவசியம். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
Junior Engineer பணிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Controller, Controllerate of Quality Assurance, Kirkee, Pune, 411 003.Vocational Instructor பணிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Deputy Director, Vocational Rehabilitation Centre for Handicapped, No C-432, 1st 'B' Main, 1st Cross, Peenya 1st Stage, Behind Peenya Station, Bangalore-560 058.
பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வு உதவியாளர் பணிக்கு,
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
CAO, Central Water and Power Research Station, Khadakwasla, Pune-411 024.Wireless பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:CIFNET, Govt. of India, PB.No. 1724,Fine Arts Avenue, Cochin - 16.Processing cum Quality Assurance பணிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:NIFPHATT, PB. No. 1801, ForeshoreRoad, Kochi - 682 016.விண்ணப்பங்களை அனுப்பி வைக்க, ஏப்ரல் 22-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment