TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய ராணுவக் காவல் படையில் 21 ஆயிரம் பேருக்கு வேலை!

மத்திய ராணுவக் காவல் படைகளில் கான்ஸ்டபிள்கள் (GD) மற்றும் அசாம் ரைபிள்சில் ரைபிள் மேன்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 21 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) வெளியிட்டுள்ளது.இந்தப் பணிகளில் சேர பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியில்சேர குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.மாநில வாரியாக, பணியிடங்களுக்கு ஒதுக்கீடு உள்ளன. இதுமட்டுமின்றி, எல்லைப்புறப் பகுதிகளிலும் தீவிரவாதிகளால் பாதிப்புக்குள்ளான மாநிலங்களிலிருந்தும் வரும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்களில் தனி ஒதுக்கீடு செய்யப்படும்என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.01.01.2013 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 23- ற்குள் இருக்க வேண்டும். உடல் தகுதித் தேர்வு(PST), உடல் வலிமைத் தேர்வு(PET), எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதி உடையவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் இந்த எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். ஜெனரல்  இன்டலிஜென்ஸ் அண்ட் ரீசனிங், பொது அறிவு மற்றும் பொது விழிப்புணர்வு, அடிப்படைக் கணிதம், ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 100.இந்தப்பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 50 ரூபாய் ஆகும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.உடல் தகுதித் தேர்வு(PST), உடல் வலிமைத் தேர்வு (PET)வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம். வருகிற மே 12-ஆம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில்மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். செப்டம்பர் 30-ஆம் தேதி வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.ஆப்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 11.01.2013, ஆன்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 09.01.2013.விபரங்களுக்கு:http://ssconline.nic.in

No comments:

Post a Comment